ஹோம் /நியூஸ் /மதுரை /

அசுரன் படம்போல சம்பவம்.. வேட்டைக்குச் சென்றபோது மின்வேலியில் சிக்கிய இளைஞர்.. காப்பாற்ற முயன்ற 5 நாய்களும் பலி!

அசுரன் படம்போல சம்பவம்.. வேட்டைக்குச் சென்றபோது மின்வேலியில் சிக்கிய இளைஞர்.. காப்பாற்ற முயன்ற 5 நாய்களும் பலி!

எஜமானரைக் காப்பாற்ற முயன்று மின்வேலியில் சிக்கி 5 வளர்ப்பு நாய்கள் உயிரிழப்பு...

எஜமானரைக் காப்பாற்ற முயன்று மின்வேலியில் சிக்கி 5 வளர்ப்பு நாய்கள் உயிரிழப்பு...

மதுரை அலங்காநல்லூர் அருகே வேட்டைக்குச் சென்றவர் மின்வேலியில் சிக்கியவர் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற 5 நாய்களும் உயிரிழந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்ற போது எஜமானரைக் காப்பாற்ற முயன்றபோது, மின்வேலியில் சிக்கி 5 வளர்ப்பு  நாய்கள் உயிரிழந்த நிலையில், இளைஞரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர், அப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது. அவர் நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அதனால் 5 நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்களை தான் வேட்டைக்கு செல்லும் போதெல்லாம் துணைக்கு அழைத்துச் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கொண்டையம்பட்டி எனும் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் காட்டுப் பன்றி வேட்டைக்கு மாணிக்கம் சென்றுள்ளார். அப்போது, அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த மின்வேலியை கண்ட நாய்கள், எஜமானரைக் காப்பாற்ற நினைத்து, மின்வேலியை மிதித்து ஒவ்வொன்றாக துடிதுடித்து இறந்துள்ளன. அப்போது நாய்களைக் காப்பாற்ற முயன்ற மாணிக்கமும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also see... சீர்காழி அருகே வடிகாலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த முதல்வர்!

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தோட்டத்தில் மின்வேலி அமைத்த அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Dog, Madurai