Home /News /madurai /

மதுரையில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புலிகுத்தி பட்டான் கல் கண்டுபிடிப்பு

மதுரையில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புலிகுத்தி பட்டான் கல் கண்டுபிடிப்பு

புலிக்குத்தி பட்டான் கல்

புலிக்குத்தி பட்டான் கல்

Madurai District: பாண்டிய நாட்டில் மட்டுமே புலிக்குத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது, மற்ற பகுதிகளில் இவ்விதமாக வேட்டை நாயின் உருவம் புலிகுத்தி கல்லில் காணப்படுவது மிகவும் அபூர்வமாகும்.

    மதுரை அருகே பாண்டிய நாட்டிற்கே உரித்தான புலிகுத்தி பட்டான் கல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள எஸ்.பெருமால்பட்டியில் பாண்டியநாடு பண்பாடு மையத்தை சேர்ந்த அருண்சந்திரன் களஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டுபிடித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது,  “ஆரம்ப காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான், கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர்.
    கால்நடைக்கு பொதுவாக ஆபத்து விளைவிக்கும் பாம்புகளும், கால்நடைகளை வேட்டையாடி உணவாககொள்ளும் சிறுத்தை, புலி மற்றும் பிற மாமிச உண்ணிகள் அதிகமாக மலை பகுதிகளில் காணப்படும். எனவே இவற்றிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின்போது
    வீரர்களோ அல்லது வேட்டையாட வரும் விலங்குகளோ உயிரிழப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4அடி உயரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்படுள்ளது, அருகில் காணப்படும் பெண் அவ்வீரணின் மனைவியாக இருக்கலாம்.

    வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகிறது, பாண்டிய நாட்டில் மட்டுமே புலிக்குத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது, மற்ற பகுதிகளில் இவ்விதமாக வேட்டை நாயின் உருவம் புலிகுத்தி கல்லில் காணப்படுவது மிகவும் அபூர்வமாகும்.

    இப் புலிகுத்தி பட்டான் கல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, தற்போது இந்த கல் சேதமடைந்து காணப்படுகிறது என்றும், அரசு இதனை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    செய்தியாளர் - அருண், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Archaeology, Madurai

    அடுத்த செய்தி