Home /News /madurai /

மதுரையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது...

மதுரையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது...

கைதான 4 பேர்

கைதான 4 பேர்

Madurai | மதுரை மாநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட கணவன், மனைவி, மகன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து 18.6 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இது தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பெயரில், காவல் துணை ஆணையர் சீனிவாச பெருமாள் நேரடிப்பார்வையில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ரவி தலைமையிலான 2க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.

    இதில் தொடர்புடைய மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நாலு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் பிடிபட்ட நான்கு பேரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 48 வயதான ஜனாபுல்லா அவரது மனைவி ராஸ்யா 35., மற்றும் 17 வயது மகன். உறவினரான மதுரை பேரையூரை சேர்ந்த 29 வயதான சித்தாரா ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள்தான் மதுரை மாநகரில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் குடியிருக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் செயின் பறிப்பு, டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

    Also see...ஈபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? ஓபிஎஸ்

    அவர்களிடமிருந்து சுமார் ரூ.18,60,000/ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா.? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மகன் உறவினர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: திருமலை, மதுரை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Madurai, Theif

    அடுத்த செய்தி