ஹோம் /நியூஸ் /மதுரை /

ஜல்லிக்கட்டு காளைகளை திருடிய மர்ம நபர்கள்.. பாலமேட்டில் அதிர்ச்சி!

ஜல்லிக்கட்டு காளைகளை திருடிய மர்ம நபர்கள்.. பாலமேட்டில் அதிர்ச்சி!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu kalai | ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் காளைகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Palamedu | Madurai

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோயில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோயில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் சரவணன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை உட்பட 3 காளைகள் வெவ்வேறு இடங்களில் ஒரே நாள் இரவில் காணாமல் போனது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்போதிலிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்தப் பகுதியிலேயே நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு காளைகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காளைகளின் உரிமையாளர்கள் பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பாலமேடு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Palamedu