ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை ரயில் நிலையத்தில் 26.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்... ஒருவர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் 26.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்... ஒருவர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் 26.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்...

மதுரை ரயில் நிலையத்தில் 26.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்...

Madurai | மதுரை ரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 26.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  ரயில்களில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை பயணிகள் கொண்டு வருவது சமீப நாட்களாக பெருகி வரும் நிலையில் அதை தடுப்பதற்கு ரயில்வே காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  மதுரை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு மூன்றாம் நடைமேடையில் பெங்களூரு - நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு வண்டி வந்து நின்று கொண்டிருந்தது.

  மதுரை ரயில்வே இருப்புப்பாதை உதவி ஆய்வாளர் தலைமையில் ரயிலில் ஆய்வு மேற்கொண்ட பொழுது, சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் வைத்திருந்த 3 பைகளை ஆய்வு செய்ததில் அதிலிருந்து 26.5 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை , யாதவர் தெருவை சேர்ந்த ராஜா முகமது என்பது தெரியவந்துள்ளது.

  Also see... குளிர்கால காற்றுமாசைக் குறைக்க மாற்றுவழி கண்டுபிடித்த ஐஐடி ஆய்வாளர்கள்

  மேலும் ராஜா முகமதுவை மதுரை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் COTPA act ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Drug addiction, Madurai, Seized