Home /News /madurai /

65வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

65வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

கைது செய்யப்பட்ட இளைஞன்

கைது செய்யப்பட்ட இளைஞன்

Madurai district News : மதுரை சோழவந்தான் அருகே 65 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று வாயை கட்டி பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது காமுகன் கைது.

மதுரையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நேற்று இரவு  7 மணி அளவில் பேருந்தில் வந்து இறங்கி கச்சிராயிருப்பு பிரிவு அருகே நடந்து சென்றுள்ளார். ஆனால், தினமும் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வரும் பாட்டி, இரவு 9 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த பேரன், உறவினர்களை அழைத்து சுற்றுப்புற பகுதிகளில் பாட்டியை தேடினார். அப்போது கண்மாய் கரை அருகில் பாட்டி உணவு கொண்டு சென்ற பை, ஆடைகள் கிடந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பேரன், அருகில் இருந்த உறவினர்களை அழைத்துள்ளார். பாட்டி கண்மாய் நீரில் தவறி விழுந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் உறவினர்கள் தேடி உள்ளனர். ஆனால், பாட்டி கிடைக்காததால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, வாய் கட்டப்பட்ட நிலையில் கண்மாய்க்குள் காயத்துடன் மூதாடி கிடப்பதை கண்ட போலீசார் உறவினர்களின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காடுபட்டி போலீசார் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள கீழமட்டையான் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய சிவபாண்டி என்பவர், மூதாட்டியை கண்மாய்கரைக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

Must Read : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

சிவபாண்டி மீது ஏற்கனவே இரண்டு பாலியல் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 65 வயது பாட்டியை 25 வயது இளைஞர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி  மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, Rape, Youth arrested

அடுத்த செய்தி