ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்கள் நெருங்கும் வேலையில் பொதுமக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல மேலாண் இயக்குனர் கூறியதாவது, “பொங்கல் பண்டிகை மற்றும் தொடர்விடுமுறை வருவதால் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையில் இருந்து 280 பேருந்துகளும், திருச்சி - 135, திருப்பூர் - 80, கோவை - 120, திருநெல்வேலி - 35. நாகர்கோவில் - 35, திருச்செந்தூர் - 30. மற்றவை - 175 என மொத்தமாக பல்வேறு இடங்களுக்கு 610 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 16.01.2023 முதல் 18.01.2023 வரை சென்னைக்கு 275 பேருந்துகளும், திருச்சி - 138, திருப்பூர் - 77, கோவை - 121, திருநெல்வேலி - 35, நாகர்கோவில் - 35, திருச்செந்தூர் - 30, மற்றவை - 189 என மொத்தமாக பல்வேறு இடங்களுக்கு 625 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யபட்டுள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் பொறியாளர்கள் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Pongal 2023, Special buses