முகப்பு /செய்தி /மதுரை / 2 வயது குழந்தையின் தலையில் சிக்கிய அலுமினிய பாத்திரம்.. போராடி மீட்ட தீயணைப்புத்துறை!

2 வயது குழந்தையின் தலையில் சிக்கிய அலுமினிய பாத்திரம்.. போராடி மீட்ட தீயணைப்புத்துறை!

2 வயது குழந்தையின் தலையில் சிக்கிய சட்டி

2 வயது குழந்தையின் தலையில் சிக்கிய சட்டி

Madurai News : சிறுமியின் தலையில் இருந்து சட்டியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது  குழந்தையின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக்கொண்டது.

மதுரை மணிநகரம் முதல் தெருவை சேர்ந்த 2 வயது குழந்தையான அஸ்வினி தன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் கிடந்த அலுமினிய பாத்திரத்துக்குள் குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. இதனால் அஸ்வினி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாள். இதனை கண்டு சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது துடிதுடித்தனர்.

மேலும், சிறுமியின் தலை சட்டிக்குள் இருந்ததால் அவளுக்கு மூச்சுத்திணறியது. இதைக்கண்டு மேலும் பெற்றோர் திகைத்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியோடு சிறுமியின் தலையில் இருந்து சட்டியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

இதையும் படிங்க : திமுகவின் கைபாவையாக ஆளுநர் இருக்க மாட்டார்- எல்.முருகன்

இந்நிலையில், பெற்றோர் சிறுமியை மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அப்போது அங்கிருந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு சிறிய அளவிலான கத்திரிக்கோலை கொண்டு சிறுமியின் தலையில் மாட்டிக்கொண்ட சட்டியை லாவகமாக வெட்டினர்.

பின்னர் பத்திரமாக சிறுமியை மீட்டனர். இதைத்தொடர்ந்து சிறுமி மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Madurai