மதுரை அலங்காநல்லூர் அருகே மரத்தில் ஏறி கொக்கு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த நிலையில், 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (38) அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் தனது உறவினரான முத்துசெல்வி வீட்டிற்கு வந்துள்ளார்.
முத்துசெல்வி வீட்டின் முன்னால் இருந்த புளியமரத்தில் இளைஞர்கள் சிலர் கொக்கு பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் அப்பகுதி இளைஞர்கள் சிலர் கொக்கு பிடிக்க வந்துள்ளனர். அப்போது வீட்டில் பெண் பிள்ளைகள் இருப்பதால் இங்கு இளைஞர்கள் வந்து கொக்கு பிடிக்க கூடாது என ராமமூர்த்தி கண்டித்துள்ளார். அதனால் இளைஞர்களுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் கலைந்து சென்ற இளைஞர்கள், நேற்றிரவு தனது நண்பர்களை அழைத்து வந்து ராமமூர்த்தி, முத்துசெல்வியிடம் தகராறு செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தகராறு முற்றியதால் கைகலப்பாக மாறியுள்ளதை தொடர்ந்து அந்த இளைஞர்கள் ராமமூர்த்தியை கிரிக்கெட் விளையாடும் பேட்டால் தாக்கியதில் ராமமூர்த்தி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை ஆட்டோ மூலம் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு முத்துச்செல்வி அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகாபுரியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய இரு இளைஞர்களையும் கைது செய்தனர். அந்த இருவர் மீதும் கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.