Home /News /madurai /

கார் ஓட்டியபோது திடீர் மாரடைப்பு.. அடுத்தடுத்து விபத்து - மதுரையில் இருவர் உயிரிழந்த பரிதாபம்

கார் ஓட்டியபோது திடீர் மாரடைப்பு.. அடுத்தடுத்து விபத்து - மதுரையில் இருவர் உயிரிழந்த பரிதாபம்

சாலை விபத்து

சாலை விபத்து

Madurai : மதுரையில் கார் ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அடுத்தடுத்த வாகனங்களில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை கூடல்நகர் பகுதியில் ஒருவர் கார் ஓட்டிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டதில் தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்களில் மோதிய விபத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்தனர்.

மதுரை கூடல்நகர் அப்பாத்துரை நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செந்தில்குமார் (47) என்பவர் தனது காரில் சிக்கந்தர்சாவடி பகுதியிலிருந்து செல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது கூடல்நகர் மேம்பாலத்தின் நடுவே வந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓட தொடங்கியதில் முன்னால் சென்ற அடுத்தடுத்த இரு சக்கர வாகனங்களில் மோதியது.
இதில் இரு சக்கர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மதுரை ஆனையூர், ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி நாகலெட்சுமி ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், நாகலெட்சுமி கீழே விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில் பைக்கை ஓட்டிவந்த சங்கரை கார் தரதரவென பாலத்தின் சுவரோடு உரசியபடி நீண்டதூரம் இழுத்துசென்றதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Must Read : பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது

சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர், இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேரின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், காயமடைந்த இரண்டுபேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Accident, Madurai

அடுத்த செய்தி