Home /News /madurai /

திருமங்கலம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தம்பியை கொன்ற சகோதரர்கள்...

திருமங்கலம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தம்பியை கொன்ற சகோதரர்கள்...

இறந்துபோன விருமாண்டி

இறந்துபோன விருமாண்டி

Thirumangalam | திருமங்கலம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தம்பியை கத்தியால் வெட்டி கொன்ற அண்ணன் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thirumangalam (Tirumangalam), India
    திருமங்கலம் அருகே ஆ.கொக்குளம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் விருமாண்டி(30). இவருடைய மனைவி விஜயா. விருமாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். இவருடைய அண்ணன் கார்த்திக் ராஜா தம்பிகள் ஐகோர்ட் ராஜா மற்றும் காசிராஜா ஆகியோர் உள்ளனர்.

    சகோதரர்கள் இடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் குடும்பப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக விருமாண்டி மற்றும் விஜயாவை கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா  அழைத்துள்ளனர்.

    சகோதரர்களின் அழைப்பை ஏற்று அவர்களது சொந்த ஊரான கரிசல்பட்டியில் உள்ள வீட்டு முன்பு சென்ற போது அங்கிருந்த விருமாண்டியின் தாயார் தங்கமாளை பார்த்து எல்லாத்திற்கும் காரணம் நீதானே என விருமாண்டி திட்டி உள்ளார். இதனால் ஐகோர்ட் ராஜா,கார்த்திக் ராஜா மற்றும் ஐகோர்ட் ராஜா நண்பர் காளப்பன்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக விருமாண்டியை கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தைக் கண்டு தாய் தங்கம்மாள், விருமாண்டி மனைவி விஜயா அதிர்ச்சியுற்றனர். இந்நிலையில் கடைசி தம்பி காசிராஜா அருகில் இருப்பவர்கள் அங்கு வரவே மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக செக்காணுரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் செக்காணுரணி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also see....பேருந்து ஜன்னல் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள்..

    விருமாண்டி மனைவி விஜயா செக்காணுரணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா, சரத்குமார் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Madurai, Murder case, Property, Thirumangalam

    அடுத்த செய்தி