மதுரைக்கு சுமார் 11 கிலோ மதிப்பு உடைய அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை தெற்கு மாசி வீதி சின்னக்கடை தெருவில் உள்ள ஒரு நகைப் பட்டறையில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ அம்பர் கிரீஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நகை பட்டறையில் இருந்த மஞ்சன கார தெருவைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ராஜாராம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சுந்தரபாண்டி, சிவகங்கை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கவி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 11 கிலோ திமிங்கிலம் எச்சத்தையும் கைப்பற்றினர்.
இதன் சர்வதேச மதிப்பு சுமார் 15 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். கைது செய்த 3 பேரையும் மதுரை மண்டல வனத்துறை அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரனை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையில் சில புரோக்கர்கள் மூலமாக திமிங்கல எச்சத்தை இவர்கள் வாங்கியதும் நகை வியாபாரிகள் மூலமாக வெளி நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து உள்ள வனத்துறை மற்றும் காவல்துறை அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
அம்பர் கிரீஸ் என்றால் என்ன?
ஆழ்கடலில் வசிக்கும் 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே அம்பர் கிரீஸ் எனப்படுகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட இந்த அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
அதோடு வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதைத் தடுக்க அம்பெர்கிரிஸ் ஒரு நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. திமிங்கிலம் தனது உடலிலிருந்து வெளியேற்றிய அம்பர்கிரிஸ் எனப்படும் வாந்தி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆவதால் இது அரியவகை பொருளாக பார்க்கப்படுகிறது. இந்த அம்பர் கிரீஸ் மூலம் தயாரிக்கப்படும் வாசனை திரவியம், மிகவும் விலை உயர்ந்தது. எனவே திமிங்கலத்தின் ஒரு கிலோ அம்பர் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு உடையது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai