ஹோம் /நியூஸ் /மதுரை /

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி.. மதுரையில் அரசு மரியாதை..! அமைச்சர்கள் பங்கேற்பு..!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி.. மதுரையில் அரசு மரியாதை..! அமைச்சர்கள் பங்கேற்பு..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக காரில் செல்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai | Tamil Nadu

  மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அரசு சார்பில்,  அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, ராமச்சந்திரன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  தொடர்ந்து, பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக காரில் செல்லும் அமைச்சர்கள், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Anbil Mahesh Poyyamozhi, Durai murugan, Madurai, Muthuramalinga Thevar, Thevar Jayanthi