Home /News /madurai /

மதுரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து உருண்டு விபத்து - 11 பேர் காயம்

மதுரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து உருண்டு விபத்து - 11 பேர் காயம்

விபத்துக்கு உள்ளான கார்

விபத்துக்கு உள்ளான கார்

Madurai : மதுரை திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தமுயன்ற கார் கவிழ்ந்த விபத்து 11 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் அழகுமுத்து கோன் குருபூஜைக்கு சென்று விட்டு சிவகங்கை நோக்கி சென்ற கார் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் முன்னால்  சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை மாவட்டம் நென் மேனியை சேர்ந்த 11 பேர் ஸ்கார்பியோ காரில் தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் பகுதியில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜைக்கு சென்றவர்கள் மீண்டும் சிவகங்கை நோக்கி கோவில்பட்டி வழியாக விருதுநகர் -  திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    காரை சிவகங்கை மாவட்டம் சிங்கனோடை அருகே உள்ள சாத்தான் கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். கார் திருமங்கலம் அருகே  குதிரைச்சாரி குளம் விலக்கு பகுதியில் வந்த போது காரின் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை  இழந்த கார் திடீரென சாலையில் கவிழ்ந்து உருண்டு விழுந்தது.

    இதில், காரில் சென்ற ஓட்டுநர் சிவகங்கை மாவட்டம் நென்மேனியை சேர்ந்த திவாகர் (27), அரவிந்த் (26), தினேஷ்குமார் (23), திருநாவுக்கரசு (23), சரத்குமார் (22), உட்பட பதினோரு பேர் காரினுள் சிக்கிக் கொண்டனர். விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விபத்தில் இருவர் பலத்த காயம் அடந்த நிலையில், மற்ற 9 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன், விபத்து குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

    Must Read : அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்

    தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து காயம் அடைந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த குருபூஜைக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கே பரபரப்பு நிலவியது.

    செய்தியாளர் - சிவக்குமார், திருமங்கலம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai, Road accident

    அடுத்த செய்தி