Home /News /madurai /

கொலை சம்பவத்துக்கு ஸ்கெட்ச்.. பாலத்துக்கு அடியில் பதுங்கல் - மதுரையில் சிக்கிய ரவுடிகள் அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை சம்பவத்துக்கு ஸ்கெட்ச்.. பாலத்துக்கு அடியில் பதுங்கல் - மதுரையில் சிக்கிய ரவுடிகள் அதிர்ச்சி வாக்குமூலம்

மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையம்

மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையம்

மதுரையில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சி சம்பவங்களால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதை தடுக்க சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர காவல் ஆய்வாளர்கள் பூமிநாதன், முகமது இத்ரீஸ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டதை அடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக எல்லீஸ் நகர் மேம்பாலம் அடியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு  சந்தேகம் படும்படியாக  10 பேர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கு இருந்து தப்பி ஓடவே போலீசார் விரட்டி  5 பேரை பிடித்தனர். அப்போது அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள் மேலவாசல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ஜெயராஜ் பாலா, திடீர் நகர் பகுதியை சேர்ந்த மண்ட மகேந்திரன் , ஹீரா நகர் பகுதியை சேர்ந்த பேய் மணிகண்டன்,  பெருமாள் , மேலவாசல் பேச்சிமுத்து என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணையில்  அவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக, எல்லீஸ் நகர் மேம்பாலம் அடியில் பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட பதுங்கி இருந்ததாக, மேற்கண்ட 5 பேரையும் எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

Also see... குழித்துறையில் களைக்கட்டியது வாவுபலி பொருட்காட்சி..

இதே போல மதுரை ஆரப்பாளையம், வைகை தென்கரை பகுதியில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் அவர்கள் திடீர் நகர் தக்காளி பாபு, வண்டியூர், பாண்டியன் நகர், திலகர் தெருவை சேர்ந்த அஞ்சான் சிவா , திடீர் நகர் காளிதாஸ் என்ற பல்லு காளி, மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ஜோ திருமலை , ஹீரா நகர்  ஊமையன் செல்வராஜ். என்பது தெரியவந்தது எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

Also see... வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது

அப்போது அவர்கள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக, சம்பவ இடத்தில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் கரிமேடு போலீசார் கைது செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Madurai

அடுத்த செய்தி