தமிழகம், புதுவையில் உள்ள 3 சாமிகளை நம்பாதீர்கள்: ஸ்ரீ பிரியா

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்காக தனி காவல்துறை, சொத்துரிமை, பெண்களுக்கு அனைத்திலும் சமபங்கு ஆகியவற்றை பெற்றுத்தர மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு அளியுங்கள் என்று ஸ்ரீ பிரியா புதுச்சேரியில் பேசினார்.

தமிழகம், புதுவையில் உள்ள 3 சாமிகளை நம்பாதீர்கள்: ஸ்ரீ பிரியா
நடிகை ஸ்ரீபிரியா
  • News18
  • Last Updated: April 2, 2019, 2:40 PM IST
  • Share this:
தமிழகம், புதுவையில் உள்ள 3 சாமிகளை நம்பாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேசினார்.

புதுச்சேரியில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரியா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ புதுச்சேரியில் கவர்னராக பெண் உள்ளார். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கருதினேன். ஆனால் இங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகம் நடக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இல்லை.

கவர்னர் முதலமைச்சருடன் சண்டை மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்கிறார். புதுச்சேரியில் இரண்டு சாமிகளும், தமிழகத்தில் ஒரு சாமியும் இருக்கிறார்கள். இவர்களால் எந்த நன்மையும் இல்லை. இந்தப் போலி சாமியார்களை யாரும் நம்பாதீர்கள்.


பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்காக தனி காவல்துறை, சொத்துரிமை, பெண்களுக்கு அனைத்திலும் சமபங்கு ஆகியவற்றை பெற்றுத்தர மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள். அரசியலை யாரும் தவிர்க்க வேண்டாம். நீங்கள் அரசியலை தவிர்த்தால், பொது வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் நினைத்தால் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அந்த மாற்றத்துக்கு மக்கள் நீதிமய்யத்துக்கு ஆதரவு தாருங்கள் என்று அவர் பேசினார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see... EXCLUSIVE பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? - எடப்பாடி பழனிசாமிதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.ஐபிஎல் தகவல்கள்:

First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories