Home /local-news /

ராஜபாளையம் அருகே பசு மாட்டை கொன்ற காட்டெருமை கூட்டம் - பீதியில் விவசாயிகள்..

ராஜபாளையம் அருகே பசு மாட்டை கொன்ற காட்டெருமை கூட்டம் - பீதியில் விவசாயிகள்..

விளை

விளை நிலங்களை பாழாக்கும் காட்டெருமைகள்

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த பசுமாட்டை காட்டெருமை முட்டியதில் பசுமாடு பலியானது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த பசுமாட்டை காட்டெருமை முட்டியதில் பசுமாடு பலியானது. தொடர்ந்து காட்டெருமை விவசாயத்தை பாழ் படுத்தி வரும் நிலையை கட்டுப்படுத்த கோரி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தின் இடையூரணி பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் செண்டுப் பூ, வாழை, கரும்பு, மா, தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகிறார்.

    விவசாயி தனது தோட்டத்தில் தங்கி விடுவது வழக்கம். நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று 3 காட்டெருமைகள் இவரது தோட்டத்திற்குள் புகுந்தது. அது சமயம் தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த 6 வயதான பசுமாட்டை காட்டெருமைகள் கொன்றது. தொடர்ந்து கோபால கிருஷ்ணனை விரட்டியதால் அவர் தோட்டத்தில் உள்ள பம்ப்செட் அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.

    மேலும் கீரை மிளகாய் போன்ற காய்கறி வகைகளை நாசப்படுத்தி விட்டு காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்து பயிர்களையும், கால்நடைகளையும் பாதுகாக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி