விருதுநகர் அருகே உற்றார், உறவினர் இன்றி ஆதரவின்றி தவிக்கும் மனநலம் குன்றியவர்களை கண்டறிந்து மனிதநேயத்துடன் சிகையலங்காரம், உணவு, உடை ஆகியவற்றை வழங்கி சமூக பணியில் தன்னார்வ இளைஞர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசியை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்களின் தன்னார்வ அமைப்பான ஆர்.சி.ஈ, மற்றும் அன்பால் இணைவோம் அமைப்பினர் பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள நகரப்பகுதிகளில் ஆதரவு இன்றி சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து குளிக்க வைத்து புத்தாடைகளை அணிவித்து, உணவு வழங்கி வருகின்றனர்.
எங்களது சமூக பணி தொடரும்:-
இளைஞர்களின் இந்த முயற்சியை கண்டு பொதுமக்கள் பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை சுமார் 13-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் தங்களது சமூகப் பணி தொடரும் என தன்னார்வ குழு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் வளரும் இளம் தலைமுறையினர் அனைவரும் சமூக பணியில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.