Home /local-news /

பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று விருதுநகர் இளைஞர்  சாதனை!! 

பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று விருதுநகர் இளைஞர்  சாதனை!! 

பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று விருதுநகர் இளைஞர்  சாதனை!! 

பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று விருதுநகர் இளைஞர்  சாதனை!! 

Viruthunagar | முழுவதும் கண்பார்வையற்ற வீரர்களுக்கான 100 மீட்டர் 400 மீட்டர் நீளம் தாண்டுதல் போட்டியில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தடகள வீரர் தினேஷ் பங்கேற்றார்.

    மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் பி.ஒன் பிரிவில் முதல் இடம் பிடித்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ள விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டியைச் சேர்ந்த தடகள வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சென்னை வண்டலூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான 17-வது பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் p1 பிரிவில் முழுவதும் கண்பார்வையற்ற வீரர்களுக்கான 100 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் போட்டியில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தடகள வீரர் தினேஷ் பங்கேற்றார். தினேஷ் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.

    முதலிடம் பிடித்த தடகள வீரருக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டன. மாநில அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளது தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மேலும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற தடகள வீரருக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Sports, Virudhunagar

    அடுத்த செய்தி