விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கவுன்சிலராக, 25 வயதான இளம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியை ஒருவர் பதவியேற்றுள்ளார். அவருக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் 5-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட,25 வயதான எம்எஸ்சி பிஎட் முதுகலை பட்டதாரி ஆசிரியை ட்விங்கிள் ஞான பிரபா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆசிரியைக்கு நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அருப்புக்கோட்டை நகராட்சியின் 36 கவுன்சிலர்களில் இவர் ஒருவர் மட்டுமே இளம் வயது கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இளம் வயதிலேயே கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியை ஞான பிரபாவுக்கு அவரது வார்டு பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கட்சிப் பிரமுகர்கள் பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கவுன்சிலரான முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஞான பிரபா கூறியதாவது, “அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், உறவினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்வேன்” என்றார்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.