விருதுநகர்: மாநில அளவிலான செஸ் போட்டி- வெற்றியாளர்களுக்கு தலா 12,000 ரூபாய் பரிசு

விருதுநகர் மாவட்டத்தில்,  மாநில அளவிலான 33 ஆவது சர்வதேச தர மதிப்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியுள்ளன. 28 மாவட்டங்களைச் சேர்ந்த 223 மாணவ மாணவியர் பங்கேற்றனர். 17 ஆம் தேதி இறுதிப் போட்டிகள் மாலையில் நடைபெற உள்ளன.

 • News18 Tamil
 • | February 15, 2022, 11:15 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 5 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  விருதுநகர் மாவட்டத்தில், மாநில அளவிலான 33 ஆவது சர்வதேச தர மதிப்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியுள்ளன. 28 மாவட்டங்களைச் சேர்ந்த 223 மாணவ மாணவியர் பங்கேற்றனர். 17 ஆம் தேதி இறுதிப் போட்டிகள் மாலையில் நடைபெற உள்ளன.

  தமிழ்நாடு 33 வது மாநில அளவிலான சர்வதேச தர மதிப்பீடு செஸ் போட்டிகள், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து துவங்கியது. இந்தப் போட்டிகள் 9 சுற்றுக்கள் கொண்டதாகும். இப்போட்டிகளில், 28 மாவட்டங்களை சேர்ந்த 152 மாணவர்களும் 66 மாணவிகளும் சேர்த்து 223 பேர் பங்கேற்றுள்ளனர்.

  வரும் 17 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு தலா 12,000 ரூபாய் மற்றும் 20 பேருக்கு சுழல் கேடயங்களும் வழங்கப்பட உள்ளது.

  இப்போட்டிகளில் கோவையைச் சேர்ந்த முன்னாள் தேசிய சாம்பியன் ஆகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லட்ஷனா சுப்பிரமணியன் என்ற உலக சாம்பியனும் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்