Home /local-news /

அருப்புக்கோட்டை: மக்களை அச்சிறுத்தி வரும் பன்றி... மூதாட்டி, சிறுவர்களை தாக்கியது

அருப்புக்கோட்டை: மக்களை அச்சிறுத்தி வரும் பன்றி... மூதாட்டி, சிறுவர்களை தாக்கியது

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை: பன்றி கடித்து மூதாட்டி  படுகாயம்-தலையில் 16 தையல்

கருவேலமரங்களுக்கு இடையே குட்டிகளை ஈன்றிருந்த பன்றி ஒன்று திடீரென வெளியே வந்து, மூதாட்டி ஆறுமுகத்தை தலை கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது. படுகாயமடைந்த மூதாட்டிக்கு தலையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது.

    விருதுநகர் அருகே  65 வயது மூதாட்டியை பன்றி கடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி மேல தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ஆறுமுகம்(எ)தனலட்சுமி(65). இவர் காலை கடன் கழிப்பதற்காக  கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்த போது கருவேலமரங்களுக்கு இடையே குட்டிகளை ஈன்றிருந்த பன்றி ஒன்று திடீரென வெளியே வந்து, மூதாட்டி ஆறுமுகத்தை தலை கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பன்றியை விரட்டியடித்து படுகாயமடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படுகாயமடைந்த மூதாட்டிக்கு தலையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதேபோல நேற்று பாளையம்பட்டியை சேர்ந்த சிறுவர்கள் இருவரையும் பன்றி கடித்ததில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி