Home /local-news /

அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி - சிவகாசியின் முதல் பெண் மேயர் யார்? - எகிறும் எதிர்பார்ப்பு

அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி - சிவகாசியின் முதல் பெண் மேயர் யார்? - எகிறும் எதிர்பார்ப்பு

நகர்புர

நகர்புர உள்ளாட்சிதேர்தல்-சிவகாசியின் முதல் பெண் மேயர் யார்?எகிறும் எதிர்பார்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சிவகாசி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும், மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் சிவகாசியில் முதல் பெண் மேயர் யார்? எ

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சிவகாசி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
    மேலும், மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் சிவகாசியில் முதல் பெண் மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு வாக்காளர் மத்தியில் எழுந்துள்ளது.

    முதல் சிவகாசி மாநகராட்சி தேர்தல்:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சியாக இருந்த சிவகாசி மற்றும் திருத்தங்கல் ஆகிய இரு நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தலா 24 வார்டுகள் ஒதுக்கீடு:-

    மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் ஆண்கள், பெண்கள் என தலா 24 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். அதேபோல், சிவகாசி மாநகராட்சியை பொருத்த வரை 53,522 ஆண் வாக்காளர்கள்; 55,958 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதனால், மாநகராட்சி தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

    இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை:-

    சிவகாசி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் முதல் முறை நடைபெறும் சிவகாசி மேயர் தேர்தலில் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
    வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களும் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.திங்கள் கிழமை அமாவாசை தினத்தையொட்டி பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி