Home /local-news /

விருதுநகர் : 'வலிமை' படத்தை வரவேற்று திமுக போஸ்டர் - இணையத்தில் வைரல்

அருப்புக்கோட்டையில் அஜித்தின் வலிமை படத்தை வரவேற்கும் விதமாகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் அக்கட்சியின் இளைஞர் அணியினர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். வலிமை படத்தை வரவேற்கும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் பேனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள் என அஜித் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வலிமை படத்தை வரவேற்று அருப்புக்கோட்டை நகரின் பெரும்பாலான பகுதிகளில் திமுக இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவும் வலிமை படத்தின் தலைப்பை வலிமை திமுக என்றும் வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், திமுக இளைஞரணி சார்பில் வெளியிட்ட போஸ்டரில் வலிமை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் மற்றும் திமுகவில் உள்ள அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இப்போஸ்டரை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி