Home /local-news /

திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில் பங்குனி உற்சவ திருவிழா தொடக்கம்!!

திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில் பங்குனி உற்சவ திருவிழா தொடக்கம்!!

திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில் பங்குனி உற்சவ திருவிழா தொடக்கம்!!

திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில் பங்குனி உற்சவ திருவிழா தொடக்கம்!!

Virudhunagar | திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது .

    திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது .

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1000- ஆண்டு பழமை வாய்ந்தஅருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோயில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகுஸ்ரீ திருமேனிநாதர் திருகோயில், 14-பாண்டிய திருத்தலங்களில் 10வது புண்ணிய ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் இன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதற்காக சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம்நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
    முன்னதாக, யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்திற்குசிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இன்று முதல் தொடர்ந்து10 நாட்கள் நடைபெற உள்ள இந்த பங்குனி திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் திருச்சுழி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

    இதனையடுத்து வரும் 16-ம் தேதி திருக்கல்யாணமும், 17-ம் தேதி மஹா தேரோட்டமும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் மற்றும் துணைமாலை அம்மனைத் தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி