விருதுநகர் அருகே உறவினர்கள் யாரும் இன்றி உயிரிழந்தவர்களின் பிரேதங்களை தங்களது சொந்த செலவில் இறுதிச் சடங்கு செய்து தன்னார்வ இளைஞர் அமைப்பு சமூக சேவையை ஆற்றி வருகிறது.
தோள் கொடுக்கும் தோழா இளைஞர்கள்:-
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து தோள் கொடு தோழா தன்னார்வ அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனாதையாக உயிரிழப்பவர்களின் பிரேதங்களை கைப்பற்றி தங்களது சொந்த செலவில் இறுதிச் சடங்கு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எங்களது சமூகப் பணி தொடரும்:-
இளைஞர்களின் சமூக பணிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும்,தங்களைப் போன்ற படித்த இளைஞர்கள் இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.