Home /local-news /

அகரத்துபட்டி கிராமத்தின் உண்மையான பெயர்க்காரணம் தெரியுமா?

அகரத்துபட்டி கிராமத்தின் உண்மையான பெயர்க்காரணம் தெரியுமா?

அகரத்துபட்டி

அகரத்துபட்டி

Virudhunagar |விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அகரத்துபட்டி என்ற திருமலைபுரம் கிராமத்தின் உண்மையான பெயர் காரணம் மற்றும் வரலாறு குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அகரத்துபட்டி என்ற திருமலைபுரம் கிராமத்தின் உண்மையான பெயர் காரணம் மற்றும் வரலாறு குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள குக்கிராமமான திருமலைபுரம் முன்னொரு காலத்தில் அக்ரஹாரத்துபட்டி என அழைக்கப்பட்டது.   முந்நாட்களில்  இவ்வூரில் பிராமணர்களே அதிகம் இருந்ததாகவும் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி இங்கு உள்ள நிலங்களை  பிராமணர்களுக்கு தானமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உழுது பயிர் செய்து விவசாயம் செய்வதற்காக பல்வேறு இனங்கள் இங்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் உருவாகி தரப்பட்டது. காலப்போக்கில் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக பிராமணர்கள் சென்னை மதுரை திருச்சி போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

    இவ்வூரின் மையத்தில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இது பிராமணர்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலாக இன்றும் இருந்து வருகிறது. ஆண்டில் ஒருமுறை மட்டும் இவ்வூரை உள்ளடக்கமாகக் கொண்ட பிராமணர் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய கிராமத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் சரவண குமார் கூறியதாவது, பிராமணர்கள், அய்யங்கார்கள் அதிகம் வசித்ததால் அக்ரகாரத்துபட்டி என்று அழைக்கப்பட்ட இவ்வூரின் பெயர் பின்னாளில் அகரத்துபட்டி என மாற்றமடைந்த  காரணம் தெரியவில்லை. தற்போது திருமலைபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    கிராமத்தின் ஊர் தலைவரான திருமலை அய்யங்கார் என்பவர் இருந்து வந்துள்ளார். கிராம மக்களின் தலைவராக இருந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார் அவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு பிராமண மக்கள் இருந்து வந்துள்ளனர். இவர்தான் அக்ரகாரத்துபட்டி என்ற பெயரை நீக்கி திருமலைபுரம் என்ற பெயரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அக்ரகாரத்துபட்டி என‌அழைக்கப்பட்ட திருமலைபுரம் வரையில் குறிப்பிடும்படியான சிவன் பெருமாள் கோவில்கள் எதுவுமில்லை. இவ்வூரின் அருகிலுள்ள கிராமத்தில் பிற்கால பாண்டியர் கால கோயில் ஒன்று மட்டுமே உள்ளது. ஒரு கிராமத்தின் வரலாறு என்பது கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் வரலாற்றோடு தொடர்புடையது என்றார்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி