விருதுநகர் அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 13 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிர சோதனை:-
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் வாகனங்கள் திருடு போவது தொடர்கதையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள் காரியாபட்டி, பாப்பனம் வழியாக தப்பிச் செல்வதாக காரியாபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஆவாரம்குளத்தைச் சேர்ந்த சரவணனை விசாரித்ததில் இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது.
13 வாகனங்கள் பறிமுதல்:-
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அச்சம் பட்டியை சேர்ந்த குணசேகரன், கருப்பசாமி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 டூவீலர்கள் மற்றும் மூன்று சக்கர மினி வேன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.