மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 3 நாட்கள் நகர்ப்புற டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், கிராமப் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட நேரம் காத்திருந்தும், 6 கிலோ மீட்டர் பேருந்தில் பயணித்தும் சாரைசாரையாக குடிமகன்கள் மதுபானங்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
வாக்குப்பதிவு தினமான இன்று (பிப்ரவரி-19) தேதி அருப்புக்கோட்டை நகரப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான குடிமகன்கள் வாக்கு செலுத்திவிட்டு, ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டங்குடி கிராம டாஸ்மாக் கடையை திறப்பதற்கு முன்பாகவே நீண்ட நேரம் காத்திருந்தும், கடையை திறந்தவுடன் குடிமகன்கள் மதுபானங்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இதனால், டாஸ்மாக் கடையில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. மேலும், பெரும்பாலான குடிமகன்கள் மது வாங்க அருப்புக்கோட்டையில் இருந்து கட்டங்குடி செல்லும் மினி பஸ்ஸிலும் டூவீலர்களிலும் சாரை சாரையாக வந்து மதுவை வாங்கிச் சென்றனர்.
குடிமகன்களின் வசதிக்காக அடிக்கடி மினி பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடிமகன்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் வந்து செல்கின்றனர். நகர்புற டாஸ்மாக் கடை வசூலை, கிராம புறங்களில் உள்ள மதுக்கடைகள் மூலம் பார்த்து இருப்பார்கள் என்று அவ்வழியாக சென்று வந்தவர்கள் சொல்லிக் கொண்டனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.