Home /local-news /

விருதுநகர்: கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு - விவசாயிகள் கவலை

விருதுநகர்: கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு - விவசாயிகள் கவலை

கொள்முதல்

கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு..

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் நிலையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 தினங்களாக நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் தேக்கம் அடைந்துள்ளது. எடை மிகவும் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் நிலையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் கணக்கில் பயிரிடப்படும் நெல் அறுவடை செய்யப்பட்டு இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல் எடுத்துச் செல்லாமல், இங்கேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் நெல் வெயிலில் காய்ந்து எடை மிகவும் குறையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, நெல் இருப்பு வைக்கக்கூடிய அரசு குடிமைப்பொருள் சேமிப்பு கிடங்கு மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிட்டங்கிகள் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், சேமிக்க போதிய இடம் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சுமார் 10 ஆயிரம் நெல் மூடைகள் தேங்கி உள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து உரிய விலை கொடுக்குமாறு மாாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி