Home /local-news /

ராஜபாளையம்:சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடக்கம்

ராஜபாளையம்:சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடக்கம்

ராஜபாளையம்:சர்வதேச

ராஜபாளையம்:சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ்ராஜபாளையத்தில் மட்டும் 10,875 கணக்குகளும் து விருதுநகர் மாவட்டம் முழுவதும் 53,038 கணக்குகளும் துவக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலையத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து பெண் குழந்தைகளுக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டது.அப்போது, பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது.


    செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடக்கம்:-

    ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலையத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் விருதுநகர் மாவட்ட முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்று பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கிய 20 பேருக்கு பாஸ் புத்தகங்களை முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வழங்கினார்.

    மாவட்டம் முழுவதும் 53,038 கணக்குகள் துவக்கம்:-

    ராஜபாளையத்தில் மட்டும் 10,875 கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும், விருதுநகர் மாவட்டம் முழுவதும் 53,038 கணக்குகள் துவக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அகில இந்திய அளவில் விருதுநகர் மாவட்டம் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சிறப்பான இடத்தை வகித்து வருவதாக மாவட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரத ராஜன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி