விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மன் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
விரதமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும்,மேலும் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று மாலை வெகு விமர்சியாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் சென்று கோயிலை சென்று அடைந்தது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.