விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 52 வயதான முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் கவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் கோழி இறைச்சிக்கடை நடத்திவரும் சேகரன் (52), தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2-ம் வகுப்பு பயிலும் 7- வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டறிந்த தாய், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக சேகரனை அழைத்து விசாரித்த மகளிர் காவல் ஆய்வாளர் நாகலஷ்மி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவரவே, சேகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : அ.மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.