சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ரூபாய் 5 லிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
4 நாட்கள் செல்ல அனுமதி:-
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பிரதோஷம் மற்றும் தை அமாவாசையையொட்டி இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும், தை அமாவாசையை ஒட்டி பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை கட்டணம் உயர்வு:-
இந்நிலையில், சதுரகிரிக்கு செல்லும் தாணிப்பாறை பகுதியில் வனத்துறை சார்பில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் பக்தர்களிடம் சேவை கட்டணமாக ரூபாய் ஐந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் கூடுதலாக ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு சேவை கட்டணம் ரூபாய் 10 ஆக வசூலிக்கப்படுகிறது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.