விருதுநகர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை குழுவினர், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சங்கரன்கோயிலில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் வந்த சீனிவாசன் என்பவரிடமிருந்து 1.50 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது.
அதற்குரிய ஆவணங்கள் எதுவும் காட்டப்படாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் கொண்டு வந்து நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாளிடம் ஒப்படைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.