Home /local-news /

Virudhunagar Power Cut | விருதுநகரில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

Virudhunagar Power Cut | விருதுநகரில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை (ஜன.,29) முக்கிய  பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை (ஜன.,29) முக்கிய  பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

Virudhunagar Power Cut | மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி மின் கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சாத்தூர், கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, சல் வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், கிருஷ்ணாபுரம், கீழ செல்லையாபுரம், கோவில் செல்லையாபுரம், சாணாகுளம், ஊத்துப்பட்டி, ரெட்டியபட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், பனையடிப்பட்டி, புல்லகவுண்டன்பட்டி, எலுமிச்சங்காய்பட்டி, அன்பின்நகரம், மரக்நாதபுரம், தூங்கரெட்டியாபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலபுதூர், ந.சுப்பையா புரம், நள்ளி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பெத்து ரெட்டியபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியபட்டி, மேட்டமலை, படந்தால், கெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர் பாளையம், பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பாவநாசம் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, வேலாயுதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதனால் மின் வினியோகம் பெறும் பகுதிகளான அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி மில், வெம்பூர், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Power cut, Virudhunagar

    அடுத்த செய்தி