விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் 30வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்புக்கு பின் திமுகவில் இணைந்த பெண் கவுன்சிலர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 30 வது வார்டில் அதிமுக சார்பில் சுசிலா தேவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த பதவியேற்பு விழாவுக்குப் பின் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் சுசிலாதேவி அதிமுக சார்பில் வெற்றி பெற்று திமுகவில் இணைந்ததை கண்டிக்கும் விதமாக அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டி 30ஆவது வார்டு அதிமுக சார்பில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது
அருப்புக்கோட்டை நகர்மன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று பேர் வெற்றி பெற்று கவுன்சிலர்களாகியிருக்கும் நிலையில் இரண்டு பேர் திமுகவில் இணைந்ததால் ஒரு அதிமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அருப்புக்கோட்டை நகர்மன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக வெற்றி என்ற வாசகத்துடன் 30-வது வார்டு திமுக சார்பில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.