சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை ஒட்டி பக்தர்கள் தரிசனத்திற்காக செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி:-
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தை அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.