Home /local-news /

பாலையம்பட்டி: ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பாலையம்பட்டி: ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீ

ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விருதுநகர் அருகே ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 7 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கலச நீர் தெளிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் அருகே ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, அதிகாலை 7 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கலச நீர் தெளிக்கப்பட்டது. அதன்பின் மூலவர் ராகவேந்திரா சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    பின், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கும்பாபிஷேக விழாவையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி