Home /local-news /

சிவகாசி: 73-வது குடியரசு தினத்தையொட்டி ஓவியக் கண்காட்சி - கண்ணுக்கு விருந்து படைத்த ஓவியங்கள்

சிவகாசி: 73-வது குடியரசு தினத்தையொட்டி ஓவியக் கண்காட்சி - கண்ணுக்கு விருந்து படைத்த ஓவியங்கள்

73வது

73வது குடியரசு தினத்தையொட்டி ஓவியக்கண்காட்சி-கண்ணுக்கு விருந்து படைத்த ஓவியங்கள்

விருதுநகர் அருகே 73-ஆவது குடியரசு தினத்தையொட்டி சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக  ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.பள்ள?

    73-ஆவது குடியரசு தினத்தையொட்டி விருதுநகர் அருகே சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து சென்றனர்.


    73-வது குடியரசு தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக வருங்கால இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், சிவகாசியை சேர்ந்த ஐந்து ரூபாய் பாடசாலை ( ‌‌RCE ) அமைப்பு சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஓவியப் போட்டி நடைபெற்றது.
    ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. ஓவிய போட்டியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத்திறமையை வெளி உலகிற்கு வெளிப்படுத்தினர்.

    சுதந்திர போராட்ட வீரர்களை மிகவும் தெளிவாக, நேர்த்தியாக வரைந்த 18 மாணவ, மாணவிகளின் படைப்புகள் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலைத் திறமையை ஊக்குவிக்க சிறிய முயற்சி:-

    இதுகுறித்து நம்மிடம் பேசிய போட்டி ஏற்பாட்டாளர் அசோக் குமார் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குடியரசு தினத்தை கொண்டாட முடியாமல் தவித்த நிலையில் மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர் என்று குறிப்பிட்டார்.


    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி