Home /local-news /

விருதுநகர்: 'ஜாமீன் கிடையாது' - வடிவேலு வசனத்தால் பிரபலமாகும் மீன்கடை

விருதுநகர்: 'ஜாமீன் கிடையாது' - வடிவேலு வசனத்தால் பிரபலமாகும் மீன்கடை

விருதுநகர்:

விருதுநகர்: 'ஜாமீன் கிடையாது' - வடிவேலு வசனத்தால் பிரபலமாகும் மீன்கடை

அருப்புக்கோட்டை தனியார் மீன்கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர்ந்திட வடிவேலு பட காமெடி வசனங்கள் கொண்ட பேனர் வைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

    அருப்புக்கோட்டையில் மீன்கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர்ந்திட வடிவேலு பட காமெடி வசனங்கள் கொண்ட பேனர் வைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரம் பகுதியில் புதிதாக தனியார் மீன்கடை தொடங்கப்பட்டுள்ளது. இக்கடையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வித்தியாசமாக வடிவேலுபட காமெடியில் வரும் வசனங்களை அச்சடித்து கடையின் நுழைவுவாயில் முன் பேனர் வைத்துள்ளனர்.

    'எல்லாம் அவன் செயல்' படத்தில் வடிவேலு ஜெயிலுக்குள் இருக்கும் காட்சியில் அல்வா வாசு பேசும் வசனம் ஒன்று உள்ளது. வஞ்சரம் மீன் இருக்குன்றான், வாளை மீன் இருக்குன்றான், நெய்மீன், நெத்திலி மீன்,இருக்குன்றான், ஆனா நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லைங்கிறான், கடல்லயே இல்லையாம்' இந்த வசனம் மிகவும் பிரபலம்.

    இதையே பேனரில் 'ஜாமீனை தவிர எல்லாம் மீனும் இருக்கு' என இடம்பெறச் செய்துள்ளனர். இது, வாடிக்கையாளர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மேலும் பேனரில் மீன்களின் வகைகள் மற்றும் அதனை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த விளக்கம் இடம் பெற்றுள்ளது.

    இவற்றால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து மீன்களை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய கடை உரிமையாளர் வினோத் பாண்டி, 'புதிதாக திறக்கப்பட்ட மீன் கடைக்கு வாடிக்கையாளரை ஈர்க்க வடிவேலு பட காமெடி வசனம் கொண்ட பேனர் கடையின் நுழைவு வாயிலில் வைத்தோம்.

    பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பேனர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் கடைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கின்றனர். குறைந்த விலையில் மீன்கள் விற்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது' என்றார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி