விருதுநகர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மார்ச் 1-ம் தேதிக்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை டி எண். 548 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை 02.12.2021 வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் 01.03.2022 க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் 01.03.2022 தேதிக்குள் சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் வாயிலாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 01.03.2022-க்குள் பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.