Home /local-news /

மானூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா - வாழைப்பழம் சூறை வீசும் விநோத நேர்த்திக்கடன்

மானூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா - வாழைப்பழம் சூறை வீசும் விநோத நேர்த்திக்கடன்

ஸ்ரீ

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா-வாழைப்பழம் சூறை வீசும் நேர்த்திக்கடன்

Virudhunagar | நரிக்குடி அருகே உள்ள மானூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் ரதத்தை இழுத்து சென்றனர். மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக வாழைப்பழம் சூறை வீசும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    நரிக்குடி அருகே உள்ள மானூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை அம்மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    மேலும் மூலவர் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாள் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் வாழைப் பழம் மற்றும் தானியங்கள், மிளகாய் வத்தல் சூறை வீசும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. சூறை வீசிய பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர். இவ்விழாவை ஒட்டி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி