Home /local-news /

விருதுநகர்: ஒரே வீட்டில்  மாமியார்-மருமகள் வெற்றி:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார், மருமகள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

    விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார், மருமகள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

    விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் 26-வது வார்டில் சித்தேஸ்வரி (மருமகள்) , 27-வது வார்டில் பேபி (மாமியார்) ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், இன்று (பிப்ரவரி) 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மாமியார் மருமகள் இருவரும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளனர். 26,27- வது வார்டில் போட்டியிட்ட சித்தேஸ்வரி, மற்றும் பேபி ஆகிய இருவரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்டனர்.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமியார் மருமகள் இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது, மாவட்ட மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன்- விருதுநகர்
    First published:

    Tags: Mother-in-law, Virudhunagar

    அடுத்த செய்தி