Home /local-news /

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள் - சுகாதார சீர்கேடு.!

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள் - சுகாதார சீர்கேடு.!

கோயிலாறு அணையில் செத்து மிதக்கும் மீன்களால்  சுற்றுலா பயணிகள் அவதி.!

கோயிலாறு அணையில் செத்து மிதக்கும் மீன்களால் சுற்றுலா பயணிகள் அவதி.!

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலாறு அணைப்பகுதியில் ஜிலேபி, கட்லா, கெளுத்தி, கெண்டை, அயிரை மீன்கள் உள்ளிட்ட லட்சக்காண மீன்கள் திடீரென செத்து மிதக்கின்றன.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்படும் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதன் எதிரொலியாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பெரியாறு மற்றும் கோயிலாறு அணைகள் அமைந்துள்ளன. பெரியார் அணை 47 அடி கொள்ளளவும், கோயிலாறு அணையானது 42 அடி கொள்ளளவும் கொண்டது.

    தற்போது 42 அடி  கொள்ளளவு கொண்ட கோயிலாறு அணையின் நீர்மட்டம் 18 அடியாக உள்ளது. இந்த இரு அணைகளிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு பின்னர் மீன்கள் வளர்ந்த பின்பு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கோயிலாறு அணைப்பகுதியில் ஜிலேபி, கட்லா, கெளுத்தி, கெண்டை, அயிரை மீன்கள் உள்ளிட்ட லட்சக்காண மீன்கள் திடீரென செத்து மிதக்கின்றன.

    அணைப்பகுதி முழுவதும் மீன்கள் செத்து மதிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகதார சீர்கேடு ஏற்பட்டு,சுற்றுலா பயணிகளுக்க நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி