Home /local-news /

விருதுநகர்: மாசி மக தெப்ப உற்சவ விழா- திரண்ட பக்தர்கள்  தரிசனம்

விருதுநகர்: மாசி மக தெப்ப உற்சவ விழா- திரண்ட பக்தர்கள்  தரிசனம்

விருதுநகர்:

விருதுநகர்: மாசிமக தெப்ப உற்சவ விழா- திரண்ட பக்தர்கள்  தரிசனம்

விருதுநகர் அருகே அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மக மகா பிரம்மோற்சவம் 8-வது நாளில் தெப்ப உற்சவ விழா மிக சிறப்பாக  நடைபெற்றது. உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதுப்பாளையம் அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசிமக மகா பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி துவங்கிய விழா 8 ஆம் நாள் விழாவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

    கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் அருள்மிகு சொக்கநாதர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அருள்மிகு மீனாட்சி அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி ஏழுமுறை வலம் கொண்டு வரப்பட்டது.

    பல்வேறு வாத்திய மேளதாளங்களுடன் திருமுறை மன்றம், பஞ்சோபசார குழு, சைவசித்தாந்த சபை மற்றும் சங்கரன்கோயில் அடியார்கள் குழு கலந்து கொண்டு பாடல்கள் பாடி தெப்போற்சவம் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், பெண்கள், பக்தர்கள் பங்கேற்று சிறப்பான வழிபாடு செய்தனர்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன்- விருதுநகர்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Festival, Virudhunagar

    அடுத்த செய்தி