விருதுநகர் அருகே புதுமணத் தம்பதிகள் தனது திருமண நாளில் ரத்த தான முகாம் நடத்தி உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மணமகனுக்கும் கோகிலா மணி என்ற மணப்பெண்ணுக்கும் (பிப்ரவரி 14 ) காதலர் தினத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி உறவினர்கள் நண்பர்கள் ரத்ததானம் வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக புதுமண தம்பதிகள் இணைந்து தங்களது திருமண நாளில் ரத்ததான முகாமை நடத்தியுள்ளனர். திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் என பலரும் ஆர்வமாக ரத்த தானம் செய்தனர்.
புதுமணத் தம்பதிகளின் புதிய முயற்சிக்கு உறவினர்கள் நண்பர்கள் பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து பேசிய புதுமண தம்பதிகள், “எங்களைப் போன்று திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ரத்ததான முகாம் நடத்த முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன்- விருதுநகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Donation, Marriage, Virudhunagar