Home /local-news /

கீழ்குடி அரசு பள்ளியில் ஆண்டு விழா.. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்..

கீழ்குடி அரசு பள்ளியில் ஆண்டு விழா.. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்..

கீழ்குடி

கீழ்குடி அரசு தொடக்கப்பள்ளி

Virudhunagar District : திருச்சுழி அருகேயுள்ள கீழ்குடி அரசு தொடக்கப்பள்ளியில் 6-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

    விருதுநகர் மாவட்டம் கீழ்குடி அரசு தொடக்கப்பள்ளியில் 6-ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் சிலம்பம் ஆடியும் , பாடல்களுக்கு நடனம் ஆடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

    திருச்சுழி அருகே உள்ள கீழ்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் விளையாட்டு திறனை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு விழா நடத்தப்படுவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஆண்டுவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் 6-ம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் விளையாடி தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

    அதேபோல் மாணவ, மாணவிகள் கிராமிய மற்றும் தெம்மாங்கு பாடலுக்கு கண்கவர் உடையணிந்து பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சிலம்பம் மற்றும் நடனப் போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

    மேலும் மாணவ மாணவிகளின் நடனத்தை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்டு ரசித்தனர். மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆண்டு விழா ஏற்பாட்டினை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி