Home /News /local-news /

இரண்டு நாட்கள் விடுமுறை - டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

இரண்டு நாட்கள் விடுமுறை - டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

மதுக்கடைகளுக்கு

மதுக்கடைகளுக்கு இரண்டு நாள்கள் தொடர் விடுமுறை என்பது இன்று டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மதுக்கடைகளுக்கு இரண்டு நாள்கள் தொடர் விடுமுறை என்பது இன்று டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாளை முதல் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    அலைமோதிய கூட்டம்:-

    பொங்கல் பண்டிகையான இன்று மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம் அணிந்து மதுவை வாங்கிச் சென்றனர். மேலும், நாளை திருவள்ளுவர் தினம் என்பதாலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட உள்ளன. இன்றே பெரும்பாலான மதுக்கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

    பெரும்பாலான மதுப் பிரியர்கள் கூடுதலாக பாட்டில்களை வாங்கி பைகளில் கொண்டு சென்றனர். கோவில்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் பெருவாரியான கூட்டத்தை காண முடிந்ததாக உள்ளூர் மக்கள் கூறினர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி