Home /local-news /

விருதுநகர்:ஜெயலலிதாவின் பிறந்தநாள்-பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம்

விருதுநகர்:ஜெயலலிதாவின் பிறந்தநாள்-பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம்

விருதுநகர்:ஜெயலலிதாவின் பிறந்தநாள்-பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம்

விருதுநகர்:ஜெயலலிதாவின் பிறந்தநாள்-பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய கொல்லப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா பெரியகொல்லபட்டி அதிமுக கிளை கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

    கிளைக் கழக நிர்வாகி செல்லபாண்டியன் தலைமையில் இந்நிகழ்ச்சியில் அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    பெரிய கொல்லப்பட்டிகிளைக்கழக உறுப்பினர்கள்முத்து விஜயன், பிச்சைப் பாண்டியன், முருகன், முத்துப்பாண்டி, விக்னேஷ், ராஜா, கார்மேகம், கதிரவன், அருண், முத்து, தன்ராஜ், கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக பெரியகொல்லபட்டி கிராமத்தில் உள்ள ஊரட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்பயிலும் மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் கிளைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

    செய்தியாளர்:அ.மணிகண்டன்- விருதுநகர்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி